நமக்கு வரும் மோசடி எஸ்எம்எஸ்கள் மற்றும் மெசேஜ்களை இனம் கண்டு அதிலிருந்து பாதுகாப்புடன் நம்மை காப்பாற்றும் நோக்கில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ட்ரூ காலர் நிறுவனம். ட்ரூகாலர் ஆப்பில் சேர்க்கப்பட்டுள்ள புதிய அம்சமானது ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அம்சமாகும்.
ட்ரூ காலர் நிறுவனம் இதற்கு பிராடு ப்ரொடெக்ஷன் என்று பெயரிட்டுள்ளது. இது யூசர் ஃபீட்பேக் மற்றும் இயந்திர கற்றலை பயன்படுத்தி மோசடி மெசேஜ்கள் / பிராடு எஸ்எம்எஸ்களை கண்டறியும் ஒரு ஏஐ-அடிப்படையிலான பாதுகாப்பு அம்சமாகும்.
நீங்கள் ட்ரூகாலர் ஆப் பயனராக இருந்தால், ஒரு மோசடி மெசேஜை பெறுகிறீர்கள் என்றால், ட்ரூகாலர் ஆப் ஆனது அந்த மெசேஜை ரெட் நோட்டிஃபிகேஷன் உடன் காண்பிக்கும். அதாவது குறிப்பிட்ட மெசேஜை திறக்கவோ, படிக்கவோ அல்லது அதிலுள்ள இணைப்புகளை கிளிக் செய்யவோ வேண்டாம் என்று உங்களை எச்சரிக்கும். மேலும் குறிப்பிட்ட ரெட் நோட்டிஃபிகேஷன் ஆனது உடனடியாக நிராகரிக்கப்படும் வரை உங்கள் மொபைல் ஸ்க்ரீனில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை ட்ரூகாலரின் ரெட் நோட்டிஃபிகேஷன் அலெர்ட்டை கவனிக்கவில்லை, தெரியாமல் அந்த மெசேஜை திறந்து விட்டீர்கள் என்றால் கவலை வேண்டாம். ட்ரூகாலரின் புதிய ஏஐ டூல் ஆனது குறிப்பிட்ட எஸ்எம்எஸ் உடன் இணைக்கப்பட்ட அனைத்து இணைப்புகளையும் தானாகவே முடக்கிவிடும்.
இதனால் பயனர்கள் பாதிக்கப்படாமல் இது போன்ற மோசடி இணைப்புகளிலிருந்து பாதுகாப்பாக இருப்பார்கள்.