NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பயிர்ச்செய்கை பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு நடவடிக்கைகள் இன்று நிறைவு!

பயிர்ச்செய்கை பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு நடவடிக்கைகளை இன்று நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, பொலன்னறுவை, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் பயிர்ச்செய்கை தொடர்பான மதிப்பீட்டு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அந்த சபை கூறியுள்ளது.

அத்துடன் அநுராதபுரம், குருநாகல், மாத்தளை ஆகிய பகுதிகளில் இன்று மதிப்பீட்டு ந்வடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை குறிப்பிட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களின் இறுதி அறிக்கை அடிப்படையில் இழப்பீட்டை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தினால் அழிவடைந்த பயிர்சசெய்கைகளை மதிப்பீடு நடவடிக்கைகளை கமநல அபிவிருத்தி திணைக்களம் மற்றும் விவசாய அமைப்புகளின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தினால் இருவரை 80 ஆயிரம் ஏக்கர் பயிர்ச்செய்கை நிலங்கள் அழிவடைந்துள்ளதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த சபை கூறியுள்ளது.

Share:

Related Articles