இத்தாலியில் இருந்து கொழும்பில் உள்ள பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட பரிசுப்பொதி ஒன்றிலிருந்து 30 கிலோகிராம் ஹஷிஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 212 மில்லியன் ரூபா என சுங்கப் பேச்சாளரும், மேலதிக பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பொதி, மத்துகம பிரதேசத்தில் உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுங்கப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.