NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பருத்தித்துறை நோக்கிச் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

யாழ்ப்பாணம் – கொடிகாமத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி நெல்லியடி பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஐவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

கொடிகாமம் பகுதியில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்று கொண்டிருந்த இந்த தனியார் பஸ் நெல்லியடி பகுதியில் திடீரென வீதியை விட்டு விலகி மறுபுறம் கவிழ்ந்துள்ளது.

சம்பவத்தின் போது, பஸ்ஸில்; 10க்கும் குறைவான பயணிகளே இருந்ததாலும், பஸ்ஸின் சாரதி உட்பட நான்கு பயணிகளுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், உயிர்ச்சேதம் குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், விபத்து இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட விசாரணைகளின் போது, பஸ் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தினால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

Share:

Related Articles