NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பறக்க தயாரான விமானத்தில் இருந்து குதித்த பயணியால் பரபரப்பு!

கனடாவின் – டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் டுபாய்க்கு புறப்பட எயார் கனடா விமானம் தயாராக இருந்த போது, பயணி ஒருவர் விமானத்தில் இருந்து குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சகல பயணிகளும் தங்களது இருக்கையில் அமர்ந்திருந்த போது, பயணி ஒருவர் தனது இருக்கையில் அமராமல் நின்று கொண்டிருந்தார். திடீரென்று அவர் விமானத்தின் கேபின் கதவை திறந்து கீழே குதித்தார். இந்த வாலிபர் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து குதித்ததில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் விமானத்தில் இருந்து எதற்காக கீழே குதித்தார்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles