அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் வசித்து வந்த 65 வயது முதியவர் ஒருவருக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ள நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அதிக தொற்றும் தன்மை கொண்ட H5N1 ரக வைரசின் தாக்குதலுக்கு ஆளானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனை லூசியானா சுகாதார துறை தெரிவித்து உள்ளது.
காட்டு பறவைகள் மற்றும் வளர்ப்பு பறவைகள் ஆகியவற்றுடன் தொடர்பில் இருந்த அவருக்கு இந’;த தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.