மழையுடனான காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாகப் பல நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அதன்படி வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் உரியச் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியமாகும் எனச் சுகாதார பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.