NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பல சுயேட்சை வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் பினாமிகளாக பயன்படுத்தப்படுகின்றனர் – மஹிந்த தேசப்பிரிய

பல சுயேட்சை வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் உண்மையில் போட்டியிடும் வேறு சில வேட்பாளர்களின் பினாமியாக பயன்படுத்தப்படுவதாக முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சுயேட்சை வேட்பாளர்கள் குறித்து தவறாக எதுவும் கூற முடியாது என கோட்டையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் கூறினார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

DESAPRIYA – VOICE CUT

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் இதற்கு முன்னர் தற்போதைய ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் போன்ற பதவிகளை வகித்துள்ளார்.

எவ்வாறாயினும், எங்கள் அனுபவத்தின் அடிப்படையில், பல சுயேட்சை வேட்பாளர்கள் உண்மையில் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு பினாமிகளாக செயல்படுகிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட கட்சியுடன் நேரடி தொடர்பு கொண்ட 3 அல்லது 4 முன்னாள் எம்.பி.க்கள் ஒரு சுயேச்சை வேட்பாளரை ஆதரிக்க வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

நான் வெளிப்படையாக இருக்கிறேன். பினாமி வேட்பாளர்களின் பிரச்சினை தொடர்பான எந்தவொரு சவாலையும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்.

Share:

Related Articles