கியூபாவில் உள்ள பிரதான மின் உற்பத்தி நிலையம் பழுதடைந்ததையடுத்து அந்த நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், தற்போது கியூபாவில் பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், பழுதடைந்துள்ள மின் உற்பத்தி நிலையம் விரைவில் சீரமைக்கப்படும் என கியூபா அரசாங்கம் தெரிவித்துள்ளது.