(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, கண்டி, மொனராகலை உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது நீர் விநியோகம் ஷிப்ட் முறையின் கீழ் மேற்கொள்ளப்படுவதாக, அதன் திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் நாயகம் அனோஜா களுஆராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும் குருநாகலுக்கு நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.