அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது ,காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை பகுதிகளில் பழங்கள் விற்பனை செய்யும் நிலையங்களில் பழுதடைந்த பழ வகைகளை விற்பனை செய்வது அதிகரித்து வருவதாக குற்றஞ்சாட்டடுள்ளது.
குறிப்பாக வாழைப்பழம், மாம்பழம், திராட்சைப்பழம், கொய்யாப்பழம், பலாப்பழம், பப்பாசி பழங்கள் ஆகியவை பழுதடைந்த நிலையிலும் பங்கஸ் தொற்று ஏற்பட்ட நிலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதனால் நுகர்வோர்கள் சுகாதார ரீதியாக பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொள்வதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும் முறையற்ற வகையில் உணவு தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் திடீர் களப் பரிசோதனையின் போது ஹோட்டல்கள், உணவகங்கள், மரக்கறி விற்பனை நிலையங்கள் மற்றும் பழக்கடை போன்றனவும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
ஆனால் பொது சுகாதார பரிசோதகர்களின் திடீர் பரிசோதனை காரணமாக இவ்வாறு தற்போது பழுதடைந்த பழ விற்பனை அதிகரித்தள்ளதாக நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.