NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பஸ்ஸின் சில்லில் சிக்கி யாழ். இளைஞன் பலி!

யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக உள்ள வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பருத்தித்துறையிலிருந்து யாழ் நோக்கி பயணித்த பஸ்ஸில் பயணித்த குறித்த இளைஞன்  கீழே விழுந்த நிலையில் பஸ்ஸின் சில்லுக்குள் நசியுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழிலுள்ள சிகை அலங்கரிப்பு நிலையத்தில் பணியாற்றும் முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த இளைஞனே  குறித்த விபத்தில்   உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles