NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பஸ்ஸில் ஏறச் சென்ற பெண்ணை மறித்து கடுமையாக தாக்கிய பொலிஸார்!

முல்லைத்தீவு – விசுவமடு, பாரதிபுரம் பகுதியில் பஸ்ஸில் ஏறுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணை பொலிஸார் தாக்கியதில் குறித்த பெண் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் நேற்று புதன்கிழமை (22) பிற்பகல் 3 மணி அளவில் குறித்த பெண் அவரது மகன் பேரக் குழந்தை ஆகியோர் உள் வீதியில் இருந்து பிரதான வீதிக்கு பஸ்ஸில் ஏறுவதற்காக சென்றுள்ளனர்.

இதன்போது பாரதிபுரம் கிராம அலுவலர் அலுவலகத்தில் இருந்து வந்த இரு பொலிஸார் மோட்டார் சைக்கிளில் வந்த அவர்களை மறித்த போது மறித்த இடத்திலிருந்து 20 மீற்றர் தள்ளி மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர்.

அப்போது அவ்விடத்திற்கு ஓடி வந்த பொலிஸார் மறித்த இடத்தில் சைக்கிளை நிறுத்த முடியாதா? என கேட்டு மகனையும் பின்னால் இருந்த தாயான பெண்ணையும் கடுமையாக தாக்கியுள்ளனர்

இதில் படுகாயமடைந்த தாய் உடனடியாக தரும்புரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்

இதேவேளை சம்பவ இடத்திலிருந்து பொலிஸார் உடனடியாக வெளியேறி காயமடைந்த பெண் மற்றும் அவரது மகன் பேரக்குழந்தை மோட்டார் சைக்கிள் என்பவற்றை அவ்வாறே விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

Share:

Related Articles