இந்த வருடம் ஜூலை மாதத்திற்குள் பஸ் கட்டணங்களில் அதிகரிப்பு ஏற்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த வருடம் ஜூலை மாதத்திற்குள் பஸ் கட்டணங்களில் அதிகரிப்பு ஏற்படும் என இலங்கை தனியார் புஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்இ எரிபொருள் கட்டணத்தை குறைத்திருந்தால் நிச்சயமாக பஸ் கட்டணத்தை குறைத்திருப்பதாகவும், இந்த ஆண்டு தொடக்கத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என்று தாம் நம்பியதாகவும் குறிப்பிட்டார்.
எனினும்இ அவ்வாறு நடக்கவில்லை என்பதோடு, குறைந்த பட்சம் 30 ரூபாவினால் எரிபொருள் விலை குறைக்கப்பட்டால் மாத்திரமே தம்மால் பஸ் கட்டணத்தை குறைக்க முடியும் என்றும் கூறினார்.
இதேவேளைஇ பஸ் உதிரி பாகங்களின் விலையும் அதிகரித்துள்ளமையால், தான் கடுமையான நெருக்கடியில் இருப்பதாக தெரிவித்த அவர், ஒரு பஸ்ஸின் விலை ஏறக்குறைய ஒரு கோடியே 70 இலட்சமாக உயர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதன்காரணமாகவும், பஸ்கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் ஊடகங்களிடம் மேலும் விளக்கமளித்தார்.