NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பஸ் கட்டணங்கள் குறைப்பு?

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் முதல் குறைந்தபட்ச பஸ் கட்டணம் உட்பட அனைத்து பஸ் கட்டணங்களையும் சுமார் 20 சதவீதம் வரை குறைக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இதன்படி தற்போது 30 ரூபாவாக உள்ள குறைந்தபட்ச கட்டணம் உட்பட அனைத்து கட்டணங்களும் குறைக்கப்படலாம் என அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய கொள்கையின் பிரகாரம், ஜூலை முதலாம் திகதி பஸ் கட்டணத்தை குறைக்கும் பொறுப்பு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், 12 பிரிவுகள் தொடர்பான கணக்கீடுகளை ஆணைக்குழு மேற்கொண்டு வருவதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share:

Related Articles