NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பஸ் கட்டணம் உயர்வு?

டீசல் விலையின் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது பஸ் கட்டணத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டாலும் எதிர்காலத்தில் டீசலின் விலை மேலும் அதிகரிக்கப்பட்டால் நிச்சயமாக பஸ் கட்டணத்திலும் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

மேலும், எரிபொருளின் விலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்ட போதிலும் பஸ் கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன சிங்கள ஊடகம் ஒன்றிடம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 356 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 423 ரூபாவாகும்.

இதன்படி, ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒட்டோ டீசல் 356 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு லீட்டர் சுப்பர் டீசல் 431 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 7 ரூபாவினால் ​அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 249 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.

Share:

Related Articles