NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பஸ் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவித்தல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ஜூலை மாதம் முதலாம் திகதி பஸ் கட்டணங்கள் திருத்தம் செய்யப்பட இருந்த போதிலும், தற்போதைய பஸ் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று போக்குவரத்து அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆண்டின் நடுப்பகுதியில் உத்தியோகபூர்வ பஸ் கட்டணத் திருத்தத்தின்படி பஸ் கட்டணம் 7 சதவீதம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றாலும், ‘கொவிட்’ காலத்தில் பஸ் கட்டணத்தில் 10 சதவீத அதிகரிப்புக்கு எதிராக அதிகரிக்கப்பட்ட தொகை ஈடுசெய்யப்பட்டதாக அந்த தகவலில் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 30 ரூபாவாகவும், ஏனைய அனைத்து பஸ் கட்டணங்களும் அதேவகையில் தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் மக்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் மாநாடு இன்று (30) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெறவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles