உலகக்கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் 9 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றது.
பாகிஸ்தானின் மோசமான பந்துவீச்சே தோல்விக்குக் காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். .
கடந்த ஜூன் மாதம் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக 6 மாத ஒப்பந்தத்துடன் மோர்னே மோர்கல் பதவியேற்று கொண்டார்.
அதன்பின் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர், ஆசியக் கிண்ணம். மற்றும் உலகக்கிண்ணம் ஆகியவற்றுக்கு பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைவர் இன்சமாம் உல் ஹக் பதவி விலகியதனால் பாகிஸ்தான் அணி நிர்வாகிகள் அடுத்தடுத்து பதிவியில் இருந்து ராஜினாமா செய்யக்கூடும் என்று பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாமும் விலகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.