NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாகிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு!

பாகிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்புடன் நடைப்பெற்று வருகிறது.

வாக்குச் சாவடிக்கு வாக்காளர்கள் வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி மொத்தம் 12 கோடியே 85 இலட்சத்து 85 ஆயிரத்து 760 பேர் வாக்களிக்க தகுதியுடைவர்கள் என தெரிகிறது.

இவர்கள் வாக்களிப்பதற்காக நாடு முழுவதும் 9 இலட்சத்து 7 ஆயிரத்து 675 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் எந்தவித இடையூறும் இன்றி வாக்களிக்க ஏதுவாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலையொட்டி பொலிஸார், சிறப்பு ஆயுதப்படை வீரர்கள், இராணுவ வீரர்கள் என சுமார் 6 இலட்சத்து 50 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்குப்பதிவு முடிந்ததும் விரைவில் எண்ணும் பணி தொடங்கும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles