NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாகிஸ்தானில் கனமழை – உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பாகிஸ்தானில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அங்குள்ள சிந்து, காபூல் உள்ளிட்ட ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் கடந்த 4 நாட்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு இதுவரை 66 பேர் பலியானதாக பேரிடர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கைபர் பக்துங்குவா மாகாணத்தில் கனமழை, கட்டட இடிபாடு, மின்னல் விழுந்து உயிரிழப்பு உட்பட 46 பேர் உயிரிழந்தனர். கிழக்கு பஞ்சாபில் 21 பேர், பலூசிஸ்தானில் 10 பேர் உட்பட 80 பேர்உயிரிழந்தனர். 

பலூசிஸ்தானில் இயல்பை விட 256 சதவீதம் கனமழை பதிவாகியுள்ளதாகவும், பாகிஸ்தான் முழுவதும் 61 சதவீதம் இயல்பை மீறி மழை பெய்துள்ளதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனமழை பாதிப்பு அதிகம் உள்ள மாகாணங்களில் அவரசநிலை பிரகடனப்படுத்தப்பட்டு வெள்ள நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles