NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை- நபரை அடித்துள்ள சீரியல் நடிகை ராதா

சுந்தரா டிராவல்ஸ்  படத்தில் முரளிக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை ராதா.  கடந்த ஆண்டு ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா 2 சீரியலிலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை ராதாவுடன் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்ததாகவும், இதுகுறித்து அவரிடம் பேசியபோது அவர் தன்னை தாக்கியதாக முரளி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த நிலையில் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

Share:

Related Articles