பாகிஸ்தானில் முகமது ஸ்மையில் எனும் 36 வயதுடைய நபர் குர்ரானை அவமதித்ததாக தெரிவிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நபர் குர்ரானின் பக்கங்களை எரித்தாதாக கூறி குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, அதனை அறிந்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தீவைத்ததோடு சிறையில் இருந்த முகமது ஸ்மையிலை உயிரோடு எரித்து கொலை செய்துள்ளனர். மேலும், இது தொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இந்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.







