NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாகிஸ்தானுக்கு இலங்கையில் இருந்து இரு யானைகளை பரிசளிக்க நடவடிக்கை!

பாகிஸ்தானில் உள்ள உயிரியல் பூங்காக்களுக்கு இரண்டு யானைகளை பரிசளிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பாகிஸ்தான் – கராச்சி மிருகக்காட்சிசாலையில் நூர் ஜெஹான் என்ற ஆப்பிரிக்க யானை இறந்ததை தொடர்ந்து, நல்லெண்ணத்தின் அடையாளமாக பாகிஸ்தானுக்கு இரண்டு யானைகளை வழங்க இலங்கை உறுதியளித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்க செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திடம் இரண்டு யானைகளை வழங்க உதவும்படி பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, இலங்கை இரண்டு யானைகளை பாகிஸ்தானுக்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்று கராச்சி மிருகக்காட்சிசாலைக்கும் மற்றொன்று லாகூருக்கும் அனுப்பி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Share:

Related Articles