NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாகிஸ்தான் அணியில் பாபர் அஸாமின் சகோதரர்கள் !

பாகிஸ்தான் அணியின் கப்டன் பாபர் அசாமுக்கும், முன்னாள் பாகிஸ்தான் வீரர்களான கம்ரான் அக்மல், உமர் அக்மல் ஆகியோருக்கும் இடையே நெருக்கமான உறவு உள்ளதாகவும், மூவரும் ஒன்றுவிட்ட சகோதரர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்ரான் அக்மலுக்கு 41 வயது ஆகிறது. இவர் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் , தொடக்க ஆட்டக்காரராக இவர் களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

கம்ரான் அக்மலின் உடன்பிறந்த தம்பி உமர் அக்மல் 33 வயதாகும். இவர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்னாக களமிறங்கி அதிரடியாக ஆடக்ககூடியவர்.

கம்ரான் அக்மல், உமர் அக்மலின் தம்பியான பாபர் அசாம் பாகிஸ்தான் அணியில் இடம்பிடிக்க இவர்கள் 2 பேரின் வழிக்காட்டுதல்களும், அவர்களுடன் இணைந்து மேற்கொண்ட பயிற்சிகளும் மிகவும் முக்கியமானதாக கூறப்படுகிறது.

Share:

Related Articles