NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் கொலை முயற்சி – அரசியல் கைதிகள் விடுதலை!

15 வருடங்கள் தடுப்புக்காவலில் தனிமையில் தடுத்து வைத்திருந்த ஒரே அரசியல் கைதியான கனகரத்தினம் ஆதித்தன் உட்பட அரசியல் கைதிகள் மூவர் கொழும்பு மேல் நீதிமன்றினால் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராகிய பஷீர் அலி மொகமட் என்பவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி 2006 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் இராணுப் பாதுகாப்புப் பிரிவை சேர்ந்த ஏழு இராணுவ அதிகாரிகளுக்கு சதித்திட்டம் தீட்டி மரணத்தை ஏற்படுத்தியதுடன் மேலும் பத்து பொதுமக்களுக்கு கடும் காயத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கனகரத்தினம் ஆதித்தியன் யோகராசா நிரோஜன் சுப்பிரமணியம் சுபேந்திரராஜா ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

Share:

Related Articles