பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், பல்வேறு விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என இந்திய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் ஏவுகணை தாக்குதலில் 8 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதுடன். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் தகவல் தெரிவித்துள்ளதுடன் லாகூர், சியால்கோடி விமான நிலையங்கள் மூடப்பட்டுதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.