NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாக்கு நீரிணையை கடந்து மட்டு.நகர் இளைஞர் சாதனை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவனும், ஜனாதிபதி சாரணர் விருது பெற்றவருமான தேவேந்திரன் மதுஷிகன் என்ற 20 வயது இளைஞர் பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

நேற்று முன்தினம் (28) அதிகாலை ஒரு மணியளவில் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாரை நோக்கி தனது நீச்சல் பயணத்தை ஆரம்பித்த தேவேந்திரன் மதுஷிகன் பிற்பகல் 03.05 மணியளவில் தலைமன்னாரை வந்தடைந்தார்.

தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே உள்ள சுமார் 30 கடல் மைல் தூரத்தை பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா, மன்னார் மாவட்ட சாரணர் இயக்க ஆணையாளர் ஸ்ரான்லி டிமேல் லெம்பேட்; உட்பட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு அவரை வரவேற்றனர்.

Share:

Related Articles