NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாடகி கே.சுஜீவா வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார்!

அத்துருகிரிய பிரதேசத்தில் பச்சை குத்தும் நிலையமொன்றில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாடகி கே.சுஜீவா வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.

கடந்த 8 ஆம் திகதி அத்துருகிரிய பிரதேசத்தில் பச்சை குத்தும் நிலையமொன்றை திறப்பதற்காக சென்றபோது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாடகி கே. சுஜீவா உள்ளிட்ட நால்வர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கே.சுஜீவா அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு, வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.

Share:

Related Articles