NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாடசாலைகளில் கல்வி பொதுதராதர (A/L)உயர்தர ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை..!

நாட்டில் பல பாடசாலைகளில் க.பொ.த உயர்தர (A/L) ஆசிரியர்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்காக ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அரசாங்கத்திடம் எந்தத் திட்டமும் இல்லை என அந்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்

அரசாங்கம் தொடர்ந்து 30,000 ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதாகக் கூறி வருகிறது. ஆனால் இதை நிவர்த்தி செய்ய எந்தத் திட்டமும் இல்லை. இப்போது கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களிலுள்ள தேசிய பாடசாலைகளில் உயர்தர ஆசிரியர் பற்றாக்குறை ஒரு பாரிய பிரச்சினையாக உள்ளது. தற்போதுள்ள ஆசிரியர்களுக் கூடுதலான அளவு பணிச்சுமை உள்ளது. உயர்தர பாடங்களுக்கு அறிவியல், கணிதம் ஆகியவற்றுக்கு ஆங்கில வழி பட்டதாரிகள் தேவை. தகவல் தொழில்நுட்ப (ஐவு) ஆசிரியர்களும் தேவை. ஆனால் அவர்களை ஆட்சேர்ப்பு செய்ய எந்தத் திட்டமும் முன்னெடுக்கவில்லை இது ஒரு பாரதூரமான நெருக்கடி, என அவர் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles