NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாடசாலை கட்டடத்தில் இருந்து குதித்து மாணவி படுகாயம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கண்டியில் உள்ள பாடசாலை ஒன்றின் 15 வயது மாணவி ஒருவர் நேற்று (09) பாடசாலை வளாகத்திலுள்ள கட்டடத்திலிருந்து குதித்து படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்பாடசாலையில் தரம் 10இல் கல்வி கற்கும் குறித்த மாணவி, கட்டடமொன்றின் முதல் மாடியில் இருந்து குதித்து காயங்களுக்குள்ளான நிலையில், கண்டி பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றதாகவும், 15 அடி உயரத்தில் இருந்து குதித்துள்ளதாகவும் பொலிஸார் கூறியதாக ஊடகமொன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

குறித்த பாடசாலை மாணவி பாடசாலையின் மாணவத்தலைவி எனவும், கட்டுகஸ்தோட்டை களுகமுவ பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தலையில் காயம் ஏற்பட்டுள்ளதைக் கண்டறிய CT ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் அதன் பின்னர் மேலதிக சிகிச்சை அளிக்கப்படும் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles