NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணத்தை குறைக்கத் தீர்மானம்!

எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சேவை கட்டணத்தை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 5 சதவீதம் – 8 சதவீதம் வரை கட்டணங்கள் குறைக்கப்படும் என அகில இலங்கை மாவட்டங்களுக்கிடையிலான பாடசாலை சிறுவர் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் ஹரிச்சந்திர பத்மசிறி தெரிவித்துள்ளார்.

நேற்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles