பாடசாலை மாணவர்களுக்கு காலணிக்கான வவுச்சர் வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 4ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், பாடசாலை மாணவர்களுக்கு காலணிக்கான வவுச்சர் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 27ஆம் திகதியுடன் நிறைவு பெறுகிறது.
740,000 மாணவர்களுக்கு இவ்வாறு காலணிகள் வழங்கப்படவுள்ளன.
பின்தங்கிய, கடுமையாக பின்தங்கிய, தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களில் இருந்து இந்நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.