NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாடசாலை மாணவர்கள் 4 பேர் மாயம்!

தலவாக்கலை கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக  தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

15 வயதான சிறுவன் ஒருவரும், 16 வயதான 3 சிறுமிகளும் மேலதிக வகுப்புக்குச் செல்வதாகக் கூறி வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் இதுவரையில் வீடு திரும்பவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் காலை வீட்டிலிருந்து வெளியேறிய அவர்கள் நேற்று  காலை வரையில் வீடு திரும்பாத நிலையில் அவர்களின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

அதேநேரம் காணாமல் போயிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நான்கு பேரில் ஒரு சிறுமி அவரது பெற்றோருக்கு நேற்று பிற்பகல் தொலைபேசியில் தாம் நாவலப்பிட்டி பகுதிக்குச் செல்வதாகக் கூறியிருக்கிறார்.

இந்த தொலைபேசி அழைப்பு வந்த இலக்கத்தை அடிப்படையாக வைத்து விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share:

Related Articles