NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாடசாலை மாணவிகளுக்கு இலவச நப்கின்கள் வழங்க நடவடிக்கை!

பாடசாலைகளிலுள்ள பெண் மாணவர்களுக்கு இலவசமாக நப்கின்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பெண் மாணவர்களுக்காக பாடசாலைகளில் கொண்டு வரப்படும் குறித்த இலவச திட்டம் தொடர்பில் கல்வி அமைச்சர் பாராளுமன்றில் இன்றைய தினம் (27) அறிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் உள்ள பெண் பிள்ளைகளுக்கு நப்கின்களை (Sanitary Napkins) இலவசமாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த திட்டம் ஒரு பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR) திட்டமாக இருக்கும். முன்னோடி திட்டமாக 300,000 பெண் பிள்ளைகளுக்கு சானிட்டரி நப்கின்கள் வழங்கப்படும்.

சுமார் ஒரு மில்லியன் பெண் பிள்ளைகளுக்கு சானிட்டரி நப்கின்கள் பின் வழங்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles