வயது வந்த பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி பேட்களை (Sanitary Pads) கொள்வனவு செய்வதற்கான இலவச வவுச்சர்களை வழங்கும் புதிய முயற்சியை கல்வி அமைச்சு இந்த மாதம் ஆரம்பித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியின் அங்குரார்ப்பணம் இன்று காலை நாவலவில் உள்ள ஜனாதிபதி பெண்கள் பாடசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது அமைச்சர் தெரிவித்ததாவது, இந்த திட்டத்திற்காக ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
தடையில்லா கல்வியை உறுதி செய்யும் நோக்கத்தில், நல்ல வளமான குழந்தைகளை வளர்க்கும் நோக்கத்துடன் கல்வி அமைச்சு பல்வேறு மாணவர் நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வவுச்சர்களை வழங்குவதன் மூலம், பெண் மாணவர்களிடையே பள்ளி வருகையை மேம்படுத்துவது மற்றும் பொருளாதார நெருக்கடிகளின் போது ஏற்படும் கல்வி புறக்கணிப்பு மற்றும் சுகாதார பிரச்சினைகள் தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதை அமைச்சு நோக்கமாகக் கொண்டுள்ளது என மேலும் தெரிவித்தார்.