NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாடசாலை விடுமுறை நாட்களில் மாற்றம்!

2023 ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இரத்து செய்யப்பட்ட க.பொ.த உயர்தர விவசாய பாடநெறியின் இரண்டாம் பிரிவு வினாத்தாளை எதிர்வரும் முதலாம் திகதி நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களத்தின் தீர்மானித்துள்ளது.

அடுத்த தவணைக்காக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வினாத்தாளை கடந்த 10ஆம் திகதி மாணவர்களுக்கு வழங்க கல்வி அமைச்சு திட்டமிட்டிருந்தது.

எனினும் பரீட்சைக்கு முன்னதாக சமூக வலைத்தளங்களில் விவசாய பாடப்பிரிவு வினாத்தாள் வெளியாகி இருந்தமையால் சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில், குறித்த பாடநெறிக்கான பரீட்சையை இரத்துச் செய்வதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.

2023 ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டத்தை பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles