NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து இரண்டரை வயது சிறுமி பலி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

யாழ்ப்பாணம் – வசந்தபுரத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து இரண்டரை வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி தனது தாயுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டின் முன்னால் உள்ள கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

அயலவர்கள் சிறுமியை கிணற்றில் இருந்து மீட்டு யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்த போது சிறுமி உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles