கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் புனித பாப்பரசர் பிரான்சிஸ் ஆசிய பசுபிக் நாடுகளுக்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளார். இதற்கு முதற்கட்டமாக அவர் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரை சென்றடைந்துள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.
12 நாட்களைக் கொண்ட ஆசிய பசுபிக் விஜயத்தின் போது சுற்றுச்சூழல் தொடர்பான விடயங்கள் மற்றும் மதங்களுக்கிடையேயான நல்லிணக்க உரையாடல் என்பன தொடர்பில் பாப்பரசர் கவனம் செலுத்தவுள்ளார்.
பப்புவா நியு கினியா, சிங்கப்பூர் , கிழக்கு திமோர் ஆகிய நாடுகளுக்கும் பாப்பரசர் பயணிக்கவுள்ளார். 88 வயதான பாப்பரசர் கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்தும் சுகாதார ரீதியான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றார்.