NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாரம்பரிய கிளித்தட்டு போட்டி – விண்ணப்பம் தொடர்பான விபரம் உள்ளே..

கிளிநொச்சி நிர்வாக மாவட்ட எல்லைக்குள் உள்ள அனைத்து பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான பாரம்பரிய கிளித்தட்டு போட்டித்தொடரானது எதிர்வரும் ஆடிப்பிறப்பு திருநாளன்று இடம்பெறவுள்ளது.

எழுச்சிமிகு இறுதிப் போட்டிகளானது தமிழ் மக்களின் பாரம்பரிய பண்பாட்டு விழாவாகிய ஆடிப்பிறப்பு தினத்தன்று கிளிநொச்சி நகரில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த போட்டிகள், ஆண் – பெண் இருபாலருக்கும் நடைபெறும் வகையில் மாவட்ட தமிழரசின் பாரம்பரிய விளையாட்டுகள் செயலணி ஏற்பாடு செய்துள்ளது.

அத்துடன், தந்தை செல்வா வெற்றிக் கேடயம் மற்றும் பண பரிசில்களை பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன.

 மேலும், இதற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்காக ஜுன் மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 30ஆம் திகதி வரை உள்ள காலப்பகுதியில் பின்வரும் விளையாட்டுத் துறை இணைப்பாளர்களோடு தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை மற்றும் அறிவுறுத்தல்களை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலன்டீலன்:- 0776145084, அ.சிவகுமாரன்:- 0777224953 

Share:

Related Articles