NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாராளுமன்றத் தேர்தலில் சிலிண்டர் கூட்டணிக்கு ஆதரவு வழங்குவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அறிவிப்பு!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணியாக எரிவாயு சிலிண்டர் சின்னத்தின்கீழ் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வா அணி தீர்மானித்துள்ளது.

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவும், அரசியல் உயர்பீடமும் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில் நேற்று கூடியது.

இதன்போதே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலின்போதும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தரப்புக்கே நிமல் சிறிபாலடி சில்வா அணி ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles