NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – அரியநேத்திரன்

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, தமிழ்ப் பொது வேட்பாளராகப் போட்டியிட்ட பாக்கியசெல்வம் அரியநேத்திரன் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

எனினும், கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் பயன்படுத்தியிருந்த சங்கு சின்னம், இந்த முறை பொதுத் தேர்தலில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி விக்னேஸ்வரன், முன்னாள் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன ஆகியோரும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனத் தீர்மானித்துள்ளனர்.

அதேநேரம், எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ ஆகியோர் இதுவரை இறுதி தீர்மானத்தை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles