NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாராளுமன்றில் அமுலுக்கு வரும் புதிய தடை – சபாநாயகரின் அதிரடி அறிவிப்பு…!

பாராளுமன்ற விவாதத்தை தொலைபேசியில் பதிவு செய்வதற்கு அனுமதியில்லையென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும்,  தொலைபேசியில் பதிவு செய்து அதனை சமூக வளைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதற்கும் இனி அனுமதியில்லையெனவும் சபாநாயகர் கூறியுள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ 27-2 கீழ் பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு ஆளும் தரப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து கலவரத்தில் ஈடுபட்டனர்.

குறித்த நிகழ்வை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார முகப்புத்தகத்தில் பதிவேற்றியிருந்தார். இந்நிலையிலேயே சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தகாத வார்த்தைகளை பிரயோகித்து ஆளும் தரப்பினர் சபை நடுவில் வந்து எதிர்க்கட்சித் தலைவரின் உரைக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் ஆளும் தரப்பினரது செயற்பாடுகளை பிரதமர் தினேஷ் குணவர்தன அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தமையினால் ஏற்பட்ட அமளிதுமளியால் கலரியில் அமர்ந்திருந்த பாடசாலை மாணவர்கள் உடனடியாக கலரியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Share:

Related Articles