பாராளுமன்ற அமர்வுகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகை குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஒன்பதாம் பாராளுமன்ற கூட்டத் தொடரின் அமர்வுகளில் அதிக எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகக் குறைந்த அளவிலேயே பங்கேற்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு பாராளுமன்ற செயற்குழு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 200க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 அமர்வுகளுக்கு மட்டுமே பங்கேற்று உள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.