NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாராளுமன்ற நிதிக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமனம்!

பாராளுமன்ற நிதிக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதன் பிரகாரம், பாராளுமன்ற உறுப்பினர்களான சத்துரங்க அபேசிங்க, சாணக்கியன் இராசமாணிக்கம், கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் அர்கம் இல்யாஸ் ஆகியோரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று (07) ஆரம்பிக்கப்பட்டதுடன், இந்நியமனங்கள் தொடர்பான அறிவிப்பையும் சபாநாயகர் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles