NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு..!

காலி, – நாகொட பத்தேகம வீதியில் ஜிங் கங்கையின் குறுக்கே உள்ள இரும்புப் பாலத்தை திருத்திக் கொண்டிருந்த ஒருவர் இன்று (21) மாலை பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் பாலத்தின் நடுவில் உள்ள கம்பிகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாகொட பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலத்தை நாகொடை பொலிஸாரும் பிரதேசவாசிகளும் மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Share:

Related Articles