2018 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படும் குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ,சுய பாணி கிறிஸ்தவ மத போதகர் பஜிந்தர் சிங்கிற்கு இந்திய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
வடக்கு மாநிலமான பஞ்சாபில் உள்ள தனது வீட்டில் வைத்து, சிங்
குறித்த்த பெண்ணை பாலியல்துன்புறுத்தல் செய்ததாகவும், அந்த செயலைப் பதிவு செய்து பின்னர் அந்த காணொளியை பயன்படுத்தி தன்னை மிரட்டியதாகவும், பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சுமத்தியிருந்தார்.
இலட்சக்கணக்கான மக்களால் பின் தொடரப்படுகின்ற சிங், தனது சுவிசேஷகர் பாணி பிரசங்கம் மற்றும் நிகழ்வுகளுக்காக புகழ் பெற்றவராக காணப்படுகின்றார். மேலும் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் மீது தனது கைகளை வைத்து குணப்படுத்துவதாக பலரும் நம்பிக்கை கொண்டுள்ளனர். இப்படி பட்ட இவர் செய்திருக்கும் இக் குற்றத்துக்கு தற்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.