NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பால் புரையேறி குழந்தை உயரிழப்பு!

மிருசுவில் வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த பிறந்து 26 நாட்களேயான குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தை பிறந்தது தொடக்கம் வைத்தியசாலையிலேயே இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று பால் புரையேறி குழந்தை உயிரிழந்துள்ளது.

பால் சுவாசக் குழாயினுள் சென்றதால் மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் நேற்றையதினம் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Share:

Related Articles