கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் கொலை வழக்கில் பிணையில் வந்த நபர் மர்மமான முறையில் தொடருந்து பாதைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொலை சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என சந்தேகத்தில் (31) அன்று கைது செய்யப்பட்டு கடந்த மாதம் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நபரே நேற்று (26) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி செல்வா நகர் பகுதியில் சேர்ந்த 22 வயதுடையவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் பார்வையிட்ட பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
மேலும் இந்த சடலம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் கொலையா?, தற்கொலையா என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.