முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்வது தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் அங்கீகாரம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காகவே அவர் இவ்வாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.