NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரபல சினிமா தயாரிப்பாளர் படுகொலை !

ஈரானில் பிரபல சினிமா தயாரிப்பாளர் மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில 83 வயதுடைய தரியூர் மெஹர்ஜூய் மற்றும் இவரது மனைவி வஹிதே முகமதிபர் ஆகியோரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஈரானில் தெக்ரான் அருகே உள்ள கராஜில் இவர்கள் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் தரியூர் மெஹர் ஜூய் தனது மகள் மோனாவை இரவு உணவுக்காக வீட்டுக்கு வருமாறு கையடக்க தொலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பினார்.

இதையடுத்து , சுமார் 1 மணி நேரம் கழித்து மோனா வீட்டுக்கு வந்தார். அப்போது பெற்றோர் கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த நிலையில், இது குறித்து அவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குள்ள பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles